எல்லா பதிவுகள்
கட்டுரைகள்
அனைத்தும் காண்க →காத்திருக்கிறவர்களுக்கு துணையும் கேடகமுமானவர்
நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர். சங்கீதம் 33:20 தேவனாகிய கர்த்தர் தமக்கு காத்திருக்கிறவர்களுக்கு துணையும்கேடகமுமானவர். தம்மை அண்டிக்கொள்ள
காத்திருக்கிறவர்களின் ஆத்துமாவை விடுவிக்கிறார்
தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்; பஞ்சத்தில் அவர்களை உயிரோடேகாக்கவும், கர்த்தருடைய கண் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது. சங்கீதம் 3
காத்திருக்கிறவர்களை இரட்சிப்பார்
ஆரம்பத்திலே துரிதமாகக் கிடைத்த சுதந்தரம் முடிவிலே ஆசீர்வாதம் பெறாது. தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே; கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார். நீதிமொழிகள் 20: 21,22 பிரியமானவர்களே,
சத்திய ஆவி
சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப் பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். யோவான்
காத்திருந்தவர்கள் பாக்கியவான்கள்
ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள். ஏசாயா 30: 18 தேவனுடைய ஜ
பீதி அடைய வேண்டாம் அவர் நம்மோடு
பின்பு ஒருநாள் அவர் தமது சீஷரோடுங்கூடப் படவில் எறி: கடலின் அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்; அப்படியே புறப்பட்டுப் போனார்கள். ( லூக்கா 8 : 22, மத்தேயு 8 : 23, மாற்கு 4 : 35 ). ஒருநாள் இயேசு தமது
சிறு துணுக்குகள்
அனைத்தும் காண்க →இருதயம் திறந்தார்
ஆண்டவர் என் இருதயத்தைத் திறந்தார் அவரைத் துதித்து என் வாயைத் திறந்தேன்
நன்மை செய்
பலன் எதுவும் எதிர்பாராமல் மற்றவர்களுக்கு நாள்தோறும் நீ ஏதாவது நன்மை செய்
விழிப்போடு காத்திரு
கடந்த காலத்தைக் குறித்து சிந்தியாதே! வருங்காலத்தைக் குறித்து கவலையடையாதே! நிகழ்காலத்தில் செய்கிறவைகளை ஜெபத்துடன் செய்! வீண்பொழுது போக்காதே! கிறிஸ்துவுக்காக கூடுதல் நேரம் வேலைசெய்! சில ஆத்துமாக்களையாவது இரட்சிப்புக்குள் வழி நடத்து! கர்த்தருடைய வருகைக்காக விழிப்போடு காத்திரு!
பொறுமை
பொறுமை உள்ள மனிதன் வாழ்வில் நிச்சயம் வெற்றி பெறுவான்
தேவனுடைய வேலை
தேவனுடைய வேலையை செய்து முடிப்பதே உங்கள் முதல் கவலையாய் இருக்கட்டும் உங்கள் கவலையை தீர்த்து வைப்பதே தேவனுடைய முதல் வேலையாய் இருக்கும்
வேதம் வித்து
நாம அதிகமா வேதம் வாசிக்கிறத பற்றி சாத்தான் ஒருபோதும் கவலை பட போறது இல்ல வாசித்ததை வாழ்க்கையில் விதைக்காத வரை வேதம் வித்து மாதிரி நாம தான் எடுத்து விதைக்கணும் விளைய வைக்குறது வித்தகன் (ஆண்டவர்)
சாத்தானும் தேவனும்
சாத்தான் சிறந்ததைத் தருவதாக வாக்கு கொடுப்பான் ஆனால் மோசமானதைத் தருவான் பெருமை தருவதாகச் சொல்லி சிறுமை தருவான் லாபம் தருவதாகச் சொல்லி நஷ்டம் தருவான் மகிழ்ச்சி தருவதாகச் சொல்லி வேதனை தருவான் ஜீவன் தருவதாகச் சொல்லி மரணம் தருவான் தேவனோ என்ன சொன்னாரோ அதை அப்படியே தருவார் ஏனெனில் அவருடைய வாக்குகளெல்லாம் உண்மையானவைகள்
பெரிய தப்பிதம்
ஒருவனுடைய ஜீவியத்தில் ஏற்படுகிற பெரிய தப்பிதம் அவன் வழிவிலகி நடக்கும்பொழுது அதைப்பற்றி உணர்ச்சியற்றிருப்பது.
ஜெபமும் வேத வாசிப்பும்
ஜெபம் – மனிதர்கள் தேவனிடம் பேசும் ஊடகம் வேத வாசிப்பு – தேவன் மனிதர்களிடம் பேசும் ஊடகம்
நற்செய்தி அறிவித்தல்
இந்தியாவுக்கு சுவிசேஷகனா ஜெர்மனியிலிருந்து வந்த சீன் பால்க்க என்பவரை ஜெர்மன் தேசத்து அரசன் இந்தியாவுக்கு அனுப்பி வைத்தபோது, அவருக்கு 23 வயது. அவர் தரங்கம்பாடி என்ற இடத்தில் வந்து இறங்கினபோது, அவரை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அற்பமா எண்ணினார்கள். அவருடைய இருதயம் மிகவும் பெலவீனப்பட்டுப் போயிருந்தது. அவருடைய சுய சரித்திரத்தை வாசித்துப்பாருங்கள்! ஒரு நாளில், ஒரு மனிதனுக்காவது நற்சேதியை அறிவிக்காமல், என் வாழ்க்கையை கழித்ததேயில்லை என்று குறிப்பிடுகிறார்.
காண்பதே விசுவாசிப்பது
காண்பதே விசுவாசிப்பது என்று மனிதன் கூறுகிறான். விசுவாசிப்பதே காண்பது என்று தேவன் கூறுகிறார்.
நீயே தான் ...
இருள் ஒளியை மறைத்து விடுவதில்லை - மாறாக இன்னும் பிரகாசமாக காட்டும். தோல்விகள் மனிதனை தோற்கடிப்பது இல்லை - மாறாக வெற்றி அடையவே வழி காட்டுகின்றன. தோல்வியை சந்திக்காத எவனும் வெற்றி பெற்றவன் அல்ல தோல்வி அடைந்தும் சோர்வடையாதவனே வெற்றி பெற்றவன் அல்லது தோல்வியை சந்திக்காத எவனும் தோல்வி பெறாதவன் அல்ல தோல்வி அடைந்தும் சோர்வடையாதவனே தோல்வி பெறாதவன் சில வேளைகளில் மனிதர்கள் படிக்கும் வேதாகமம் ...."நீயே தான்"
வார்த்தையே நம்முடைய வாழ்க்கை
ஒரு ஊருல ஒரு குருடன் தர்மம் எடுத்து வாழ்ந்து வந்தார். எப்போதும் அவர் தர்மம் எடுக்கும்போது அருகில் "நான் ஒரு குருடன் எனக்கு உதவி செய்யுங்கள்" என்ற ஒரு பலகை வைதிருப்பார். அந்த வழியாக செல்லுவோர் அவருக்கு தர்மம் கொடுப்பார்கள். ஒரு நாள் அவ்வழியே வந்த ஒருவர் அந்த பலகை எடுத்து பழைய வாக்கியத்தை அழித்து விட்டு புதியதாக சில வரிகள் எழுதி வைத்து விட்டு சென்றார். பின்பு அந்த வழியாக சென்றோர் அவருக்கு அதிகமாக தர்மம் கொடுத்தததா்கள். ஒரு நாள் அவ்வழியே சென்ற ஒருவரை அந்த குருடர் இதில் என்ன வரிகள் எழுதி உள்ளது என்று கேட்டார் "இன்று ஒரு அழகான நாள் ஆனால் என்னால் பார்க்க முடியாது" என்று கூறி சென்றார். வார்த்தை நம்முடைய வாழ்க்கையை மாற்றுகிறது. வார்த்தை நம்முடைய உலகத்தை மாற்றுகிறது.
நம்பிக்கை
ஒரு இளைஞன் ஒருவன் ஒரு பெரிய மலை மீது நின்றுக்கொண்டு ஆண்டவரின் படைப்புகளை பார்த்து தேவனை துதித்துக் கொண்டு இருந்தான். அப்பொழுது அந்த மலை உடைந்து விழுந்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தான். அவன் எதிர் திசையில் ஓடி மலையின் மற்றொரு முனையை அடைந்த போது மற்றுமொரு அதிர்ச்சி அவனுக்கு காத்திருந்தது, அவனுக்கு முன்பாக இருந்தது அகல பாதளம். சற்றும் எதிப்பாரத சூழ்நிலையில் மாட்டிக்கொண்ட அந்த இளைஞன் கடவுளே என்னை காப்பாற்றும் என சத்தமிட தொடங்கினான். திடீரென வானத்திலிருந்து "கீழே குதி" என்ற ஒரு சத்தத்தை கேட்டான் அந்த இளைஞன். அது கடவுளின் குரல் என்று நிச்சயமாக நம்பினான். கீழே குதித்தால் இறப்பு நிச்சயம் என்றாலும் கடவுளை நம்பி கீழே குதித்தான். மலையிலிருந்து கீழே இறங்க உதவும் படிக்கட்டுகள் மிக அருகில் இருந்ததால் காயம் கூட எதுவும் படவில்லை. கர்த்தரை நம்பினோர் கைவிடப்படுவதில்லை.
எங்கு சென்றாலும் சந்தோஷமே
ஒரு வயதான தாயார் ஒரு சமயம் கப்பலில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும் போது, பெரும் புயல் ஒன்று கப்பலை தாக்கிற்று. அப்போதும் அந்த தாயார் மிகுந்த மகிழ்ச்சியுடன் பாடலை பாடிக்கொண்டு இருந்தார்கள். ஒருவர் ஓடி வந்து அந்த தாயாரிடம் அம்மா உங்களால் மட்டும் எப்படி இவ்வளவு சந்தோஷமாக இருக்க முடிகிறது என்று கேட்டார். அப்போது அந்த தாயார் கப்பல் பத்திரமாக கரைக்கு சென்றால் நான் என்னுடைய சின்ன மகள் வீட்டுக்கு சென்று சந்தோஷமாக என் பொழுதை கழிப்பேன். இல்லையென்றல் என் பெரிய மகள் வீட்டிற்க்கு சென்று மிகுந்த மகிழ்ச்சியுடம் இருப்பேன் ஏனென்றல் என் பெரிய மகள் எனக்கு முன்பாகவே இயேசுவை காண சென்று விட்டால் ஆகவே நானும் சென்று மகிழுவேன் என் நேசருடன்.
எண்ணுங்கள்
கஷ்டங்களை விட ஆசீர்வாதங்களை எண்ணுங்கள் நஷ்டங்களை விட லாபங்களை எண்ணுங்கள் காயங்களை விட சந்தோஷங்களை எண்ணுங்கள் எதிரிகளை விட நண்பர்களை எண்ணுங்கள் கண்ணீரை விட புன்னகைகளை எண்ணுங்கள் ஏமாற்றுபவர்களை விட விசுவாசம் உள்ளவர்களை எண்ணுங்கள் கோபம் கொள்பவர்களை விட நற்குணம் கொண்டவர்களை எண்ணுங்கள் இவை எல்லாவற்றின் மேலும் ஆண்டவர் உங்களுக்கு செய்தவைகளை எண்ணுங்கள்
அளவில்லா ஆண்டவரின் அன்பு
நான் யேசுவிடம் சென்று என மீது "எவ்வளவு" அன்பு வைத்துள்ளீர் என கேட்டேன்; தன் இரு கரங்களையும் விரித்த அவர் "இவ்வளளவு" என கூறி தன் ஜீவனை எனக்காக கொடுத்தார். அவரின் அன்பிற்கு ஆழம், அகலம் எதுவும் உண்டோ!
பகிர்ந்துகொள்
நான் எத்தனை பேரிடம் இயேசுவை பற்றி கூறியிருக்கிறேன். ஆனால் என் சொந்த தம்பி தங்கைக்கும் சொல்லவில்லையா? இயேசுவை அறிந்து கொண்டதால் மகிழ்ச்சியாயிரு. உனக்கு மிகவும் நெருங்கியவர்களுடன் இதை பகிர்ந்துகொள்.
என் எதிரிகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.....
என் எதிரிகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்..... ஏனென்றால், என் நண்பர்கள் பொய்யாய் புகழும் போது உண்மையை கூறுகிறார்கள் என்னைப் பற்றிய நல்ல விஷயங்களை பரப்புபவர்களை தடுக்கிறார்கள் என்னில் பிடித்த காரியங்களை அல்ல பிடிக்கதவைகளை கூறுகிறார்கள் என்னைப் பற்றிய பொய்யான கருத்துகளை அகற்றி உண்மை நிலையை அறிய செய்கிறார்கள் என் குறைகளை கண்டறிவதற்காக என் பாடல் பிடிக்கவில்லை என்றாலும் கேட்கிறார்கள்
தேடுங்கள் கண்டடைவீர்கள்
வாழ்க்கையைத்தேடு நம்பிக்கையோடு உழைப்பைத்தேடு உறுதியோடு திறமையைத்தேடு முயற்சியோடு பொருமையைத்தேடு ஆர்வத்தோடு அன்பைத்தேடு அரவணைப்போடு இயேசுவைத்தேடு நல் இதயத்தோடு.
தேவனிடம் பேசு
தேவன் ஏனோக்கின் நண்பன் ஏனோக்கிடம் பேச தேவன் வருவார் தேவனிடம் பேசி சந்தோஷமாக வீட்டிற்கு துள்ளி வருவான் தேவனிடம் பேசுவதால் - அவனுக்கு துன்பமில்லை துக்கமில்லை தேவனிடம் பேசியதை வீட்டில் சொல்லி சந்தோஷமாக மகிழ்ந்திருப்பான் நீயும் நானும் தேவனிடம் பேசி சந்தோஷமாக மகிழ்ந்திருப்போம் ஒரு நாள் ஏனோக்கு தேவனிடம் பேசிகொண்டே பரலோகம் சென்று விட்டான்.