நேசிக்கிறேன்
← திரும்பு
articles

பீதி அடைய வேண்டாம் அவர் நம்மோடு

Jenophene Abraham

பின்பு ஒருநாள் அவர் தமது சீஷரோடுங்கூடப் படவில் எறி: கடலின் அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்; அப்படியே புறப்பட்டுப் போனார்கள். (லூக்கா 8: 22, மத்தேயு 8: 23, மாற்கு 4: 35).

ஒருநாள் இயேசு தமது சீஷரோடுங்கூடப் படவில் எறி: கடலின் அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்று அழைத்து செல்கையில், போகும் வழியில் படவு ஓடுகையில் அவர் நித்திரையாயிருந்தார். அப்பொழுது கடலிலே சுழல்காற்றுண்டானதால், அவர்கள் மோசமடையத்தக்கதாய்ப் படவு தண்ணீரால் நிறைந்தது. அப்போது அவர்கள் அவரிடத்தில் வந்து நாங்கள் சாகப்போகிறோம் என்று அவரை எழுப்பினார்கள்

கர்த்தர் எழுந்து, காற்றையும் ஜலத்தின் கொந்தளிப்பையும் அதட்டினார்; உடனே அவைகள் நின்றுபோய், அமைதலுண்டாயிற்று. பின்பு அவர்கள் பத்திரமாக அக்கரைக்கு சென்றார்கள்.

பல வேளையில் நமது வழிகளில் வரும் இடர்களை, தடுமாற்றங்களை கண்டு உடனே புலம்ப ஆரம்பிக்கின்றோம். அன்று சீஷர்களும் அதை தான் செய்தார்கள், இயேசு அவர்களோடுதான் இருக்கிறார் என்பதை அறியாமல் பயந்து அலறினார்கள்.

நாமும் கூட அநேக நேரங்களில் கர்த்தர் நம்மோடிருப்பேன் என்று சொன்னதை மறந்து தவிக்கின்றோம். ஏசு சீஷர்களுக்க முன்னமே அக்கரைக்கு போவோம் வாருங்கள் என்று சொல்லு தான் அழைத்து கொண்டு வந்தார், தாம் முன்னாமே சொன்ன வார்த்தையில் நம்பிக்கையில்லாதவர்களாய் அவர்கள் பீதியடைந்தனர். இதேபோல தான் இஸ்ரவேல் ஜனங்களும் கர்த்தர் நமக்கு முன் செல்கிறார் என்று அறியாமல் செங்கக்கடலை கண்டு அதிர்ந்து புலம்பி தவித்தனர்.

அவர் பொய் சொல்ல மனிதர் இல்லை, நமக்கு வாக்கு பண்ணினதை குறித்து ஆபிரகாமை போல நம்பிக்கையுள்ளவர்களாய் இருப்போம். வானம் பூமி ஒழிந்து போனாலும் கர்த்தருடைய வாக்கு மாறாது. நாம் கர்த்தர் நம்மோடிருப்பதை சில நேரங்களில் உணராமல், பார்க்காமல் இருக்கலாம் ஆனால் அது உண்மை இல்லை அவர் நம்மோடு தான் இருக்கிறார். மனிதர்கள், சூழ்நிலைகள் மாறலாம் அவர் மாறாதவர். அவர் மனிதர் அல்லவே, பொய் சொல்வதில்லையே

வாக்கு தந்தவர் சிறந்தவர், சிறந்ததை தருபவர். "ஏமாற்றங்கள் இல்லையே"

J

எழுதியவர்

Jenophene Abraham

கிறிஸ்துவை நேசிக்கும் இதயத்துடன், தமிழ் வாசகர்களுக்கு ஆசீர்வாதமான கட்டுரைகளையும் சரித்திரங்களையும் தேடித் தொகுத்து பகிர்கிறேன்.