பாடல்
இயேசுவின் கைகள் காக்க
Yesuvin Kaikal Kaakka
இயேசுவின் கைகள் காக்க
மார்பினில் சாருவேன் – பேரன்பின்
நிழல் சூழ அமர்ந்து சுகிப்பேன்
பளிங்கு கடல் மீதும்
மாட்சி நகர் நின்றும் – தூதரின்
இன்ப கீதம் பூரிப்புண்டாக்கிடும்
இயேசுவின் கைகள் காக்க
மார்பினில் சாருவேன் – பேரன்பின்
நிழல் சூழ அமர்ந்து சுகிப்பேன்
இயேசுவின் கைகள் காக்க
பாழ்லோகின் கவலை – சோதனை
பாவக்கேடும் தாக்காது உள்ளத்தை
கஷ்டம் துக்கம் கண்ணீரும்
காணாமல் நீங்குமே – வதைக்கும்
துன்பம் நோவும் விரைவில் தீருமே
இயேசு என் இன்பக் கோட்டை
எனக்காய் மாண்டோரை- சார்ந்தென்றும்
நிற்பேன் நீரே நித்திய கன்மலை
காத்திருப்பேன் அமர்ந்து
ராக்காலம் நீங்கிட – பேரின்ப
கரை சேர மா ஜோதி தோன்றிட
இயேசுவின் கைகள் காக்க
அஞ்சாமல் இருப்பேன் – தெய்வன்பும்
விசுவாசம் கொண்டு நான் வெல்லுவேன்
ஆத்துமா சந்தோஷித்து
மகிழும் வாழ்விலே – நீர் விடிவெள்ளி
ஆதலால் நான் சுகித்திருப்பேன்