பாடல்
இயேசு ராஜன் மனுவாய் பிறந்துதித்தார்
Yesu Raajan Manuvaay Piranthuthiththaar
Bishop Gnanaprakasam
இயேசு ராஜன் மனுவாய் பிறந்துதித்தார் (2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
என்று ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
என்று ஆர்ப்பரிப்போம்(4) – இயேசு
ஏழைக்கோலம் எடுத்து வந்தார் உலகில்
ஏற்றத்தாழ்வு மாற்ற வந்தார்
மனு குலத்தின் பாவ பாரத்தை சுமக்க
மகிமையை வெறுத்து வந்தார்
– இயேசு
அடிமை ரூபம் எடுத்து வந்தார் பாவ
அடிமை வாழ்வை போக்க வந்தார்
சமாதானம் உண்டு பண்ணிட இயேசு
ஆக்கினையை ஏற்க வந்தார்
– இயேசு
ஐஸ்வர்யம் கொடுத்திடவே இயேசு
தரித்திரராகப் பிறந்தார்
தன்னுயிரையை கொடுத்திடவே இயேசு
தரணியில் பிறந்துதித்தார்
– இயேசு