பாடல்
இயேசு ராஜா வரப்போராருங்க இங்க வாங்க
Yesu Raajaa Varapporaarunga Inga Vaanga
Sirkali Yesuprakasam
இயேசு ராஜா வரப்போராருங்க இங்க வாங்க
இன்னும் கொஞ்சம் காலம் தானுங்க
அரவார எக்காளத்தோடு ஆளுகை செய்ய வாராருங்க
ஆண்டவர சந்திக்க நீங்க ஆயத்தமாகி வந்திடுங்க
எக்காளம் ஒலிக்கும் உலகில்
மரித்ததெல்லாம் உயிர்க்கும்
புத்தகங்கள் திறக்கும் நியாய
தீர்ப்பு அன்று நடக்கும்
சுத்தர்களாய் வாழ்வோர் நித்திய
சொர்க்கம் தனில் மகிழ்வார்
சத்தியத்தை எதிர்ப்போர்
தீக்கடலில் வீழ்ந்து துடிப்பார்
– இயேசு ராஜா
கண் கவரும் நாடு அது
கர்த்தர் அமைத்த வீடு
முத்து மணி தேசம் துதி
முழங்கும் இன்ப ராஜ்ஜியம்
வெள்ளங்கி தரித்தோர் இயேசு
ராஜாவோடு நடப்பார்
வெண்பாடு சேர்ந்திடவே
விரைந்தோடி வாராய்
– இயேசு ராஜா