நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இயேசு போல் ஓர் நேசர் உண்டோ

Yesu Pol Or Naesar Unntoo

இயேசு போல் ஓர் நேசர் உண்டோ

நம் மாசு துயர் தாங்கிட

வாஞ்சை நிறைவேற கெஞ்ச

தஞ்சம் அவர் போலுண்டோ

நெஞ்சம் சாந்தியை இழந்து

சஞ்சலமே கொள்வதேன்

கர்த்தரிடம் யாவும் கூற

நித்தமும் மறந்ததேன்

சோதனையோ வீண் தொல்லையோ

பாதையெங்கும் அல்லவோ

சோர்ந்து போகா நெஞ்சத்துடன்

சேர்வாய் அவர் பாதமே

வேதனையில் பங்கு கொள்ளும்

வேறே நேசர் யாருண்டு

இயேசு யாவும் அறிவாரே

பேசு அவரிடமே

பலவீனமோ தாங்கொண்ணா

கவலையின் பளுவோ

தஞ்சம் தரநேசருண்டு

சஞ்சலத்தைக் கொட்டிடு

நண்பர் கைவிட்டாரோ உன்னை

அண்டிக்கொள் இயேசுவையே

அணைப்பாரே உன்னை மார்பில்

துணை என்றும் நானென்பார்