நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இயேசு நாமம்

Yesu Naamam

A.J.I. Sam

இயேசு நாமம்

எந்தன் வாழ்வில் போதுமே

எந்தன் வாழ்வில் உந்தன் நாமம்

உயர்த்துவேன் நீரே என் தேவா – 2

கோடான கோடி நாவுகள்

போதாதையா

நீர் செய்த நன்மை நான் துதித்துப்பாடிட – 2

என் தேவனே நீர் போதுமே

உம் அன்பு என் வாழ்விலே – 2

– இயேசு நாமம்

ஆயிரமாயிரம் ஸ்தோத்திரம்

நான் சொல்லுவேன்

உமதன்பின் வெள்ளம்

என் உள்ளம் பாய்ந்திட – 2

என் இயேசுவே நீர் போதுமே

உம் கிருபை என் வாழ்விலே -2

– இயேசு நாமம்

அதிகாலை தோ ம் உம்

பாதம் பணிந்திடுவேன்

விண்ணப்பம் செய்திட

உதவிடும் என் தெய்வமே – 2

தூய ஆவியே நீர் போதுமே

உம் ஐக்கியம் என் வாழ்விலே – 2

– இயேசு நாமம்