நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்

Yesu Kiristhuvin Nal Seedaraakuvom

N. Emil Jebasingh

இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்

விசுவாசத்தில் முன் நடப்போம்

இனி எல்லோருமே அவர் பணிக்கெனவே

ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம்

நம் இயேசு ராஜாவே

இதோ வேகம் வாறாரே

அதி வேகமாய் செயல்படுவோம்

மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம்

இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம்

அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய்

ராஜ பாதையைச் செம்மையாக்குவோம்

– இயேசு

சாத்தானின் சதிகளை தகர்த்திடுவோம்

இனி இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம்

இந்த பார் முழுதும் இயேசு நாமத்தையே

எல்லா ஊரிலும் எடுத்துரைப்போம்

– இயேசு

ஆவி ஆத்துமா தேகம் அவர் பணிக்கே

இனி நான் அல்ல அவரே எல்லாம் – என

முடிவு செய்தோம் அதில் நிலைத்திருப்போம்

அவர் நாளினில் மகிழ்ந்திடுவோம்

– இயேசு