நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இயேசு எந்தன் மேய்ப்பர்

Yesu Enthan Maeyppar

Moses Rajasekar

இயேசு எந்தன் மேய்ப்பர்

எனக்கு ஒன்றும் குறைவில்லை

அவரே எந்தன் நேசர்

நான் தாழ்ச்சி அடைவதில்லை – 2

குறைவில்லை குறைவில்லை குறைவில்லை– 3

நான் தாழ்ச்சி என்றும் அடைவதில்லை

புல்லுள்ள இடங்களில் மேய்த்து

அமர்ந்த தண்ணீரண்டை நடத்தி – 2

அவர் எந்தன் ஆத்துமாவை தேற்றி

நீதியின் பாதையில் நடத்தி – என்னை

– குறைவில்லை

மரண இருளின் பள்ளதாக்கு

பொல்லாப்புக்கு ஒரு போதும் பயப்படேன் – 2

தேவரீர் என்னோடு இருக்கிறீர் – 2

உம் கோலும் உம் தடியும் என்னை தேற்றும் – 2

– குறைவில்லை

சத்துருவின் முன்பு ஒரு பந்தி

தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணி – 2

பாத்திரம் வழிந்தோட செய்வீர் – 2

பரலோகில் இடம் ஒன்று தந்தீர்!

– குறைவில்லை