நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இயேசு என் அஸ்திபாரம்

Yesu En Asthipaaram

V.D. Sachayam

இயேசு என் அஸ்திபாரம்

ஆசை எனக்கவரே – நேச முசிப்பாறுதல்

இயேசுவில் கண்டேன் யானும்

என்ன மதுரமவ – நன்றாய் நாமச்சுவை

என்னகத்தில் நினைத்தால்

இன்னல் பறந்திடுமே

– இயேசு

பஞ்சம் பசியுடனே – மிஞ்சும் துயர்

வந்தாலும் – அஞ்சிடேன் இவையை என்

தஞ்சம் இயேசு இருக்கையில்

– இயேசு

லோகம் என்னை எதிர்த்து

போவென்று சொல்லிடினும் – சோகம்

அடைவேனோ என் – ஏகன் எனக்கிருக்க

– இயேசு

வியாதிகளால் எந்தன் – காயம் கெட்டு

போயினும் – மாய தோற்றத்தை

இயேசு நாயகன் மாற்றிடுவார்

– இயேசு

பாவத்தால் என்னில் வந்த

சாப கறைகள் மாற்றி – சோபித

நீதியுடை ஆபரணமாய் ஈவார்

– இயேசு