நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

யெஷீவா யெஷீவா என்ற நாமம்

Yesheevaa Yesheevaa Enta Naamam

Ravi Bharath

யெஷீவா யெஷீவா என்ற நாமம்

உனக்கும் எனக்கும் போதும் போதும்

இனிமையான நாமம்-ஒரு

இணையில்லாத நாமம்

முழங்க்கால்கள் மடங்கிடும் நாவுகள்

சொல்லிடும் அனைவரும் தொழுதிடும்

நீதியின் சூரியனே நீரே நாயகனே

ஏழையின் காவலனே யெஷீவா யெஷீவா

பரமனின் பிள்ளைகளை காணவே

சிலுவையில் மரித்தவரே

உயிரோடு எழுந்தவர் ஆதலால்

மரணத்தை ஜெயித்தவரே

– யெஷீவா

கிருபையில் பூரணரே சிருஷ்டிப்பின் காரணரே

மூன்றில் ஒன்றானவரே யெஷீவா யெஷீவா

பாரங்களை சுமந்திடும் சிநேகிதன்

பரமனின் தவ புதல்வன்

பாவங்களை அகற்றிடும் நாயகனே

மகிமையிலே முதல்வன்

– யெஷீவா

ஆதியில் இருந்தவரே ஆவியில் நிறைந்தவரே

ஆத்தும இரட்சகரே யெஷீவா யெஷீவா

ஒப்புரவை உண்டு பண்ணும்

வேலையை திப்புரவாய் முடித்தவரே

முன் குறிக்கப்பட்ட வரை மீட்கவே

ஜீவனை கொடுத்தவரே

– யெஷீவா