நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

யாரிடம் செல்வோம் இறைவா

Yaaridam Selvom Iraivaa

Victor & Kiruba

யாரிடம் செல்வோம் இறைவா

வாழ்வு தரும் வார்த்தை எல்லாம்

உம்மிடம் அன்றோ உள்ளன

யாரிடம் செல்வோம் இறைவா

இறைவா இறைவா

இறைவா இறைவா

அலைமோதும் உலகினிலே

ஆறுதல் நீர் தர வேண்டும்

அண்டி வந்தோம் அடைக்கலம் நீர்

ஆதரித்தே அரவணைப்பாய்

– யாரிடம்

மனதினிலே போராட்டம்

மனிதனையே வாட்டுதையா

குணமதிலே மாறாட்டம்

குவலயந்தான் இணைவதெப்போ

– யாரிடம்

வேரறுந்த மரங்களிலே

விளைந்திருக்கும் மலர்களைப் போல்

உலகிருக்கும் நிலை கண்டு

உனது மனம் இரங்காதோ

– யாரிடம்