நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

யார் என்னை மறந்த போதிலும்

Yaar Ennai Marantha Pothilum

Sirkali Yesuprakasam

யார் என்னை மறந்த போதிலும் என்

இயேசுவே என்னை என்றும் மறவா நேசரே

என் இயேசுவே என்னை என்றும் மறவா நேசரே

தினம் பார்த்து பார்த்து பாதுகாத்தீர்

சேர்த்து சேர்த்து அரவணைத்தீர்

என்னை விட்டு நீங்கா நேசரே

என்னை கை விடாமல் காக்கும் இயேசுவே

– யார்

தாய் தந்தை அன்பு அது தணிந்து போகும் அன்பு

பிள்ளைகளின் அன்பு அது பிரிந்து போகும் அன்பு

நண்பர்களின் அன்பு அது நழுவி போகும் அன்பு

என்றென்றும் மாறா அன்பு இயேசு உம் தூய அன்பு

– யார்

சொந்தமோ சொந்தம் அது சோகமாம் சோகம்

பாசமாம் பாசம் அது வேஷமாம் வேஷம்

நேசமோ நேசம் அது மோசமாம் மோசம்

நேசம் பாசம் சொந்தம் எல்லாம் நீர் தானே என் இயேசு ராஜா

– யார்

உலகம் தோன்றும் முன்னே என்னையும் குறித்தவரே

தாயின் கருவில் என்னை உமக்காய் வேறு பிரித்தவரே

சாத்தானை ஜெயித்து உந்தன் இரத்தத்தால் என்னை மீட்டவரே

நித்தமும் என்னை காத்து நித்திய வாழ்வில் சேர்க்கும் தேவா

– யார்