பாடல்
யாகோபின் தேவன் துணையானார்
Yaakopin Thaevan Thunnaiyaanaar
Fr. S. J. Berchmans
யாகோபின் தேவன் துணையானார்
பாக்கியவான் நான் பாக்கியவான்
தேவனாம் கர்த்தர் இவர் மேலே
நம்பிக்கை வைத்துள்ளேன்
பாக்கியவான் நான் பாக்கியவான்
ஆத்துமாவே நீ கர்த்தரை துதி
அல்லேலூயா தினம் பாடு
நம்பத்தக்கவர் நன்மை செய்பவர்
நமக்குள் வாழ்கிறார்
– தேவனாம் கர்த்தர்
வானம் பூமி இவர் உண்டாக்கினார்
மாபெரும் கடலை உருவாக்கினார்
அரசாள்கிறார் என்றென்றைக்கும்
ராஜரீகம் செய்கின்றார்
– தேவனாம் கர்த்தர்
தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகிறார்
கட்டப்பட்டோரின் கட்டவிழ்க்கிறார்
சிநேகிக்கின்றார் ஆதரிக்கின்றார்
திக்கற்ற பிள்ளைகளை
– தேவனாம் கர்த்தர்