நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்

Visuvaasaththinaal Neethimaan Pilaippaan

Fr. S. J. Berchmans

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்

விசுவாசியே பதறாதே

கலங்காதே திகயாதே விசுவாசியே

கல்வாரி நாயகன் கைவிடாரே

தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும்

பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்

நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மை

சொந்த கரங்களால் அணைத்துக் கொள்வார்

– விசுவாசத்தினால்

பிறர் வசை கூறி துன்புறுத்தி

இல்லாதது சொல்லும் போது

நீ மகிழ்ந்து களிகூரு

விண் கைமாறு மிகுதியாகும்

– விசுவாசத்தினால்

கொடும் வறுமையில் உழன்றாலும்

கடும் பசியினில் வாடினாலும்

அன்று எலியாவை போஷித்தவர்

இன்று உன் பசி ஆற்றிடாரோ

– விசுவாசத்தினால்