நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

விண்ணுக்கும் மண்ணுக்கும் சொந்தக்காரர் நீர்தானே

Vinnnukkum Mannnukkum Sonthakkaarar Neerthaanae

Lucas Sekar

விண்ணுக்கும் மண்ணுக்கும்

சொந்தக்காரர் நீர்தானே

உம்மையன்றி யாருமில்லையே

இந்த உலகிலே

உம்மையன்றி யாருமில்லையே (2)

நான் பார்க்கும் சூரியனும்

நான் பார்க்கும் சந்திரனும்

உமது கரத்தின் கிரியைகள் தானே (2)

எனக்கென்று பூமியிலே எதுவுமில்ல (2)

சொந்தமென்று சொல்லிக்கொள்ள

உம்மையன்றி யாருமில்ல (2)

உம்மையன்|றி யாருமில்ல (2)

– விண்ணுக்கும்

என் தாயின் கருவினிலே

உருவான நாள் முதலாய்

உமது சார்பாக பூமியிலே விழுந்தேனே (2)

அன்று முதல் இன்று வரை

ஆதரித்த தெய்வமல்லோ (2)

சொந்தமென்று சொல்லிக்கொள்ள

உம்மையன்றி யாருமில்ல (2)

உம்மையன்|றி யாருமில்ல (2)

– விண்ணுக்கும்

திக்கற்ற பிள்ளைகளில்

தகப்பனும் நீர்தானே

ஏழையின் கூக்குரலை கேட்டுபதில் செய்பவரே (2)

சிறுமையானவனை உயரத்தில் நிறுத்தியே (2)

மந்தையைப் போல் பெருகச்செய்து

ஆசீர்வதிப்பவரே (2)

ஆசீர்வதிப்பவரே

– விண்ணுக்கும்