பாடல்
விண்ணப்பிக்கும் ஆவியே
Vinnnappikkum Aaviyae
Chandrasekaran
விண்ணப்பிக்கும் ஆவியே
விண்ணப்பிக்க வாருமையா
எனக்காய் ஜெபிப்பவரே உம்
கிருபையைத் தாருமையா
வாக்கு கடங்காத பெருமூச்சோடு
எனக்காய் ஜெபிப்பவரே
உம் ஆவியோடும் உண்மையோடும்
ஜெபித்திட உதவுமையா
– விண்ணப்பிக்கும்
பிதாவின் அருகே எனக்காகவே
பரிந்து பேசுமையா
பாசத்தோடும் கரம் நீட்டி
அணைத்து கொள்ளுமையா
– விண்ணப்பிக்கும்
காலை மாலையில்
உந்தன் பாதத்தில்
அமர்ந்திட உதவுமையா
உம் ஆவியினால் வழி நடத்தி
ஆறுதல் தாருமையா
– விண்ணப்பிக்கும்