நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

விடுதலை தாருமே

Viduthalai Thaarumae

Ravi Bharath

விடுதலை தாருமே என் ஆண்டவா(2)

வினை தீர்க்கும் விண்ணரசா வினை

தீர்க்கும் விண்ணரசா (2)

நித்தம் நித்தம் கண்ணீரினால்

நித்திரையை தொலைத்தேனையா

நிந்தை தீர்க்க வாருமையா நிந்தை

தீர்க்க வாருமையா

– விடுதலை

ஆறுதலின் தெய்வம் நீரே

தேற்றுவீர் உம் வார்த்தையால்

ஜீவ வார்த்தை நீரல்லவோ ஜீவ

வார்த்தை நீரல்லவோ

– விடுதலை

யாரும் இல்லை காப்பாற்றிட

தோளில் சாய்ந்து எனை தேற்றிட

நிலை மாற்ற வாருமையா நிலை

மாற்ற வாருமையா

– விடுதலை