நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

வெற்றிக்கொடி பிடித்திடுவோம்

Vettikkoti Pitiththiduvom

Fr. S. J. Berchmans

வெற்றிக்கொடி பிடித்திடுவோம் – நாம்

வீரநடை நடந்திடுவோம்

வெள்ளம் போல சாத்தான் வந்தாலும்

ஆவி தாமே கொடி பிடிப்பார்

அஞ்சாதே என் மகனே – நீ

அஞ்சாதே என் மகளே

– வெற்றிக்கொடி

ஆயிரம் தான் துன்பன் வந்தாலும்

அணுகாது அணுகாது

ஆவியின் பட்டயம் உண்டு – நாம்

அலகையை வென்று விட்டோம்

– வெற்றிக்கொடி

காடானாலும் மேடானாலும்

கர்த்தருக்கு பின் நடப்போம்

கலப்பையில் கை வைத்திட்டோம்

நாம் திரும்பி பார்க்க மாட்டோம்

– வெற்றிக்கொடி

கோலியாத்தை முறியடிப்போம்

இயேசுவின் நாமத்தினால்

விசுவாச கேடயத்தினால்

பிசாசை வென்றிடுவோம்

– வெற்றிக்கொடி