நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே

Veppamiku Naatkalil Achchamillaiyae

Fr. S. J. Berchmans

வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே

வறட்சி காலத்தில் பயம் இல்லையே - 2

என் வேர்கள் தண்ணீருக்குள்

இலையுதிரா மரம் நான் - 2

எப்போதும் பசுமை நானே

தப்பாமல் கனி கொடுப்பேன் - 2

நம்பியுள்ளேன் கர்த்தரையே

உறுதியாய் பற்றிக் கொண்டேன் - 2

பாக்கியவான் பாக்கியவான் - 2 -நான்

என்றென்றும் பாக்கியவான்

– நம்பியுள்ளேன்

கிருபை சூழ்ந்து கொள்ளும்

பேரன்பு பின் தொடரும் - உம்

இதயம் அகமகிழும் - என்

இன்னிசை தினம் பாடும் -

– நம்பியுள்ளேன்

இக்கட்டு துன்ப வேளையில்

காக்கும் தகப்பன் நீரே - 2

பூரண சமாதானம் - உம்

தினம் தினம் இதயத்திலே - 2

– நம்பியுள்ளேன்

குருடன் பர்த்திமேயு

கூப்பிட்டான் நம்பிக்கையோடு - 2

இயேசுவே இரங்கும் என்றான்

பார்வை பெற்று பின் தொடர்ந்தான் - 2

– நம்பியுள்ளேன்

நம்பி வந்த குஷ்டரோகியை

நலமாக்கி அனுப்பினீரே

யவீரு உம்மை நம்பியதால்

மகள் அன்று சுகம் பெற்றாள்

– நம்பியுள்ளேன்