பாடல்
வீராதி வீரர் இயேசு சேனை நாங்கள்
Veeraathi Veerar Yesu Senai Naangal
வீராதி வீரர் இயேசு சேனை நாங்கள்;
சேனை நாங்கள் இயேசுவின் சேனை நாங்கள்
திருவசனத்தை யெங்கும் திரிந்து சொல்வோம்
திரிந்து சொல்வோம் அதை அறிந்து சொல்வோம் - வீராதி
அறிவீனம் முற்றுமாக அதமாக்குவோம்;
அதமாக்குவோம் ஞானமதை காட்டுவோம் - வீராதி
சிலுவைக் கொடியைச் சேரத் தேடிப்பிடிப்போம்
தேடிப் பிடிப்போம் அன்பு கூறிப் பிடிப்போம் - வீராதி
இரட்சணியச் சீராவுடன் நீதிக் கவசம்
நீதிக் கவசம் கையாடுவோம் நிசம் - வீராதி
விசுவாசக் கேடகத்தை மேலுயர்த்துவோம்;
மேலுயர்த்துவோம் அதை மேலுயர்த்துவோம் - வீராதி
பாவம் பாசம் சோதனைகள் யாவும் ஜெயிப்போம்
யாவும் ஜெயிப்போம் ஆபாசம் போக்குவோம் – வீராதி