பாடல்
வரவேணும் எனதரசே
Varavaenum Enatharase
வரவேணும் எனதரசே
மனுவேல் இஸ்ரவேல் சிரசே
அருதோயம் ஒளி பிரகாசா
அசரீரி ஒரே சரு வேசா!
வேதா கருணா கரா
மெய்யான பரா பரா
ஆதார நிராதரா அன்பான சகோதரா
தாதாவும் தாய் சகலமும் நீயே
நாதா உன் தாபரம் நல்குவாயே
– வரவேணும்
படியோர் பவ மோசனா
பரலோக சிம்மாசனா
முடியா தருள் போசனா
முதன் மா மறை வாசனா
இடையர் குடிலிடை மேவி எழுந்தாய்
இமையவர் அடி தொழு மேன்மையின் எந்தாய்
– வரவேணும்
வானோர் தொழும் நாதனே
மறையாகம போதனே-
கானாவின் அதீதனே
கலிலேய வினோதனே
ஞானாகரமே நடு நிலை யோவா
நண்பா உனத நன்மையின் மகா தேவா!
– வரவேணும்