பாடல்
வழியும் நீரே சத்தியம் நீரே
Valiyum Neerae Saththiyam Neerae
Chandrasekaran
வழியும் நீரே சத்தியம் நீரே
ஜீவனும் இயேசுவே
உம்மை ஆராதனை செய்து
பாடிப்போற்றுவேன் – 2
ஆராதனை ஆராதனை
ஆராதனை இயேசுவே – 2
குருடர் கண்களை பார்க்கச் செய்தவர்
நீர்தானையா
செவிடர் செவிகள் கேட்கச் செய்தவர்
நீர்தானையா
– ஆராதனை
குஷ்டரோகியை குணமாக்கினீர்
நீர் தானையா
மரித்தோரை எழும்பச் செய்தவர்
நீர் தானையா
– ஆராதனை
சாப ரோகம் நீங்கச் செய்தவர்
நீர் தானையா
கவலை கஷ்டம் நீங்கச் செய்தவர்
நீர் தானையா
– ஆராதனை