பாடல்
வழியென்றால் எது
Valiyental Ethu
வழியென்றால் எது? அது ஜீவ வழி
வழி காட்டிட வந்தவர் யார்? அவர் இயேசு
வழியும் அவர் ஒளியும் அவர்
ஜீவ நதியும் அவரே
சத்தியமும் அவர் நித்தியமும் அவர்
ஜீவ அப்பமும் அவரே – அவர் இயேசு...
அவர் இயேசு
ஒளி என்றால் எது? அது ஜீவ ஒளி
ஒளி காட்டிடும் உத்தமர் யார்? அவர் இயேசு
– ஜீவ நதியும்
ஜலம் என்றால் எது? அது ஜீவ ஜலம்
ஜலம் காட்டும் சற்குரு யார்? அவர் இயேசு
– ஜீவ நதியும்
சத்தியம் என்றால் எது? அது தேவ சத்தியம்
சத்தியம் காட்டிடும் சற்குணர் யார்? அவர் இயேசு
– ஜீவ நதியும்
அப்பம் என்றால் எது? அது ஜீவ அப்பம்
அப்பமுட்டிடும் அன்னையும் யார்?
அவர் இயேசு
– ஜீவ நதியும்