பாடல்
வைத்தீரே முற்றுப்புள்ளியை
Vaiththeerae Muttuppulliyai
Thomas Prithvi
வைத்தீரே முற்றுப்புள்ளியை
என் கஷ்ட நஷ்டங்களுக்கு இனி
கண்ணீரில்லை கவலையில்லை
சந்தோஷம் என் வாழ்விலே
கைகளை தட்டிப் பாடுவேன்
ஆடிக் கொண்டாடுவேன்
கர்த்தர் நல்லவர் என்று பாடிடுவேன்
வியாதி வேதனையெல்லாம்
மறைந்ததே என்னைவிட்டு
குணமானேனே உம் தழும்புகளால் என்
பரிகாரி கர்த்தர் நீரே....
– கைகளை
கர்த்தரின் ஆசிர்வாதம் என்மேலே
சாபம் இனி இல்லையே
ஐஸ்வர்யத்தை கொண்டு வருமே
கர்த்தரின் ஆசிர்வாதமே
– கைகளை