நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

வேத புத்தகமே வேத புத்தகமே

Vaetha Puththakamae Vaetha Puththakamae

வேத புத்தகமே வேத புத்தகமே

வேத புத்தகமே விலை பெற்ற

செல்வம் நீயே

பேதைகளின் ஞானமே

பெரிய திரவியமே

பாதைக்கு நல் தீபமே

பாக்யர் விரும்பும் தேனே

– வேத

என்னை எனக்கு காட்டி

என் நிலைமையை மாற்றி

பொன்னுலகத்தைக் காட்டி

போகும் வழி சொல்வாயே

– வேத

துன்ப காலம் ஆறுதல்

உன்னால் வரும் நிஜமே

இன்பமாகுஞ் சாவென்றாய்

என்றும் நம்பின பேர்க்கே

– வேத

பன்னிரு மாதங்களும்

பறித்துண்ணலாம் உன் கனி

உன்னை தியானிப்பவர்

உயர் கதி சேர்ந்திடுவார்

– வேத