நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

வேண்டாம் உனக்கு கோபம் வேண்டாம்

Vaenndaam Unakku Kopam Vaenndaam

Chandrasekaran

வேண்டாம் உனக்கு கோபம் வேண்டாம்

வேண்டாம் உனக்கு கசப்பு வேண்டாம்

அது நன்மைகளை கெடுக்கும் குள்ளநரி

பலர் வாழ்வை அழிக்கும் குட்டி சாத்தான்

ஆபேலின் மேல் கோபம் கொண்ட

காயின் முடியைப் பார்

தேவ கோபத்தால் நிறைத்தானே

தேவ சமூகத்தை இழந்தானே

– வேண்டாம்

தாவீதின் மேல் கசப்பாய் வாழ்ந்த

சவுலின் முடிவைப் பார்

தேவ அபிஷேகம் இழந்தானே

அசுத்த ஆவியால் அலைந்தானே

– வேண்டாம்

தானியேல் மேல் பொறாமை

கொண்ட மனுஷர் முடிவைப் பார்

அவர் முடிவு அழிவானதே

சிங்க வாய்க்கு இரையானாரே

– வேண்டாம்