பாடல்
வேலைக்காரன் கண்கள்
Vaelaikkaaran Kannkal
Joel Thomasraj
வேலைக்காரன் கண்கள்
தன் எஜமான் கரம் நோக்கும்
தேவா எனக்காய் எல்லாம் செய்யும்
உம் கரத்தை என்றும் நோக்குவேன்
நீதியின் வலது கரம்
நீதிமானை என்றும் தாங்கிடுமே
விழுகையில் வியாதியின் நேரங்களில்
விழுகையில் வியாதியின் நேரங்களில்
வழுவாது உம் கரம் தாங்கிடுமே
– வேலைக்காரன்
கடலும் ஆறும் தடையில்லை
ஆண்டவர் கரம் என்னோடிருந்தால்
தடைகளை அகற்றும் நீர் முன்னே சென்றால்
தடைகளை அகற்றும் நீர் முன்னே சென்றால்
ஜெய வீரனாய் நானும் உம் பின் வருவேன்
– வேலைக்காரன்
சத்துவமுள்ள உந்தன் கரம்
நித்தம் காத்து வழி நடத்திடுமே
உம் கரம் பற்றியே என்றுமே நான்
உம் கரம் பற்றியே என்றுமே நான்
பத்திரமாய் இப்பூவில் நடப்பேனே
– வேலைக்காரன்