நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

வாய்க்கால்கள் ஓரத்திலே

Vaaykkaalkal Oraththilae

Fr. S. J. Berchmans

வாய்க்கால்கள் ஓரத்திலே

நடப்பட்ட மரம் நானே

என் வேர்கள் தண்ணீருக்குள்

இலையுதிரா மரம் நான் - 2

செய்வதெல்லாம் வாய்க்கும்

வெற்றி மேல் வெற்றி காண்பேன் - 2

பசுமை எப்போதுமே

தப்பாமல் கனி கொடுப்பேன்-2

எப்போதும் பசுமை

தப்பாமல் கனிகள் - 2

கர்த்தரின் திரு வேதத்தில்

இன்பம் தினம் காண்பேன் - 2

இரவு பகல் எப்போதும் (நான்)

தியானம் செய்திடுவேன் - 2

– எப்போதும்

நீதிமான் செல்லும் வழிகள்

கர்த்தரோ தினம் பார்க்கிறார் - 2

துன்மார்க்கர் பாதையெல்லாம்

அழிவில்தான் முடியும் - 2

– எப்போதும்

துன்மார்க்கர் ஆலோசனை

கேளாமல் வாழ்ந்திருப்பேன் - 2

பொல்லாரின் சொற்கள்படி

நடவாமல் தினம் வாழ்வேன் - 2

– எப்போதும்