நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

வாரும் வாரும் மகத்துவ தேவனே

Vaarum Vaarum Makaththuva Thaevanae

வாரும் வாரும் மகத்துவ தேவனே

வல்லமையாக இப்போ வந்திடும்

மகிமைச் சொரூபனே

மாவல்ல தேவனே

மன்னா வந்தாசீர்வாதம் தாருமே

– வாரும்

தாய் தந்தை நீர் தானே

தற்பரா எங்கட்கு

தரணியில் வேறோர் துணை இல்லையே

– வாரும்

பாவத்தை வெறுத்துப்

பாவியை நேசிக்கும்

பரிசுத்த ராஜனே நீர் வாருமே

– வாரும்

பக்தரும் முக்தரும்

பாடித் துதிக்கின்ற

பரலோக ராஜனே நீர் வாருமே

– வாரும்

காருண்ய தேவனே

கதியுமை அண்டினோம்

கடைசிவரையும் காத்து இரட்சியும்

– வாரும்

மன்னா நின் வரவை

எண்ணியாம் ஜீவிக்க

ஏவுதல் தினம் தாரும் ஏகனே

– வாரும்

விழிப்புள்ள ஜீவியம்

விமலா நீர் ஈந்துமே

வெற்றியடையக் கிருபை தாருமே

– வாரும்

இவ்வித பாக்கியம்

ஏழைகளெங்கட்கு

ஈந்தாலுமக்கென்றும் ஸ்தோத்திரம்

– வாரும்