பாடல்
வார்த்தையை அனுப்பியே
Vaarththaiyai Anuppiyae
Ravi Bharath
வார்த்தையை அனுப்பியே என்
வாதையை போக்குமே
என் வேதனை உமக்கு புரிகின்றதா
என் வேண்டுதல் உம்மை அடைகின்றதா
என் சோகங்கள் என் காயங்கள் உம்
காலடி வருகின்றதா
வார்த்தையை அனுப்புவேன்
உன் வாதையை போக்குவேன்
உன் வேதனை எனக்கு புரிகின்றதே உன்
வேண்டுதல் என்னை அடைகின்றதே
உன் சோகங்கள் உன் காயங்கள் நான்
சிலுவையில் சுமந்துவிட்டேன்
என் பிள்ளை என்றால் சிட்சிக்கிறேன் உன்னை
சிட்சித்தப்பின் இரட்சிகின்றேன்