நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

வானம் பூமி யாவையும்

Vaanam Poomi Yaavaiyum

Chandrasekaran

வானம் பூமி யாவையும்

படைத்த தேவனே

உம்வல்லமை வார்த்தையால்

படைத்த தேவனே

தேவனே தேவனே – 2

சூரியன் சந்திரனை நீர் படைத்தீர் ஆ… ஆ….

மழை கடல் தண்ணீரை நீர் படைத்தீர்

புல் பூ தாவரங்கள் நீர் படைத்தீர்

– வானம்

உயிரினங்கள் யாவும் நீர் படைத்தீர் ஆ… ஆ….

ஊரும் பிராணிகளை நீர் படைத்தீர்

பறக்கும் பட்சிகளை நீர் படைத்தீர்

– வானம்

ஆதாம் ஏவாளை நீர் படைத்தீர் ஆ… ஆ….

ஆசீர்வாதங்களை அள்ளி கொடுத்தீர்

எல்லா உரிமையும் எமக்கு தந்தீர்

– வானம்