வானம் இருட்டிருச்சி நிலவும் வெளிச்சிருச்சி
Vaanam Iruttiruchchi Nilavum Velichchiruchchi
Moses Rajasekar
வானம் இருட்டிருச்சி
நிலவும் வெளிச்சிருச்சி
ஆகாய மண்டலமும் கருநீல நிறமாச்சி – 2
நட்சத்திர மண்டலமும்
பூக்கள் தொடுத்திருச்சி – 2
நடுவானம் வெள்ளி மின்ன
நம்ம ஊரும் மகிழ்ந்திருச்சி
– வானம்
எல்லோரும் வாங்கடியோவ் ஆடி
பாடலாம் நம்ம ஊரு தெய்வம் தான்
இயேசு என்று சொல்லலாம்
குத்தடி குத்தடி ஷீலக்கா
குனிஞ்சி குத்தடி ரெபேக்கா
நம்ம ஊரு தெய்வம் தான்
இயேசன்னு சொல்லக்கா
ஒய்யாரே … அல்லேலூயா… ஒய்யா… - 2
ஒய்யாரே … அல்லேலூயா… ஒய்யா
நம்ம ஊரு தெய்வம் தான்
இயேசுராஜா தான் அவர்
நன்மைகள் செய்பவரா சுற்றி வராறு – 2
நம்ம தெரு வழியா கழுதை மேல
பவனி வர்றாரு – நம்ம
ஊரு மக்க ஓசன்னா
சொல்லி பாடுது – 2 – வானம் – குத்தடி
மாரி காலம் முடிஞ்சது
மழையும் ஓய்ந்தது நம்ம
ஊருக்குள்ள மண்வாசனை
முகத்தில் அடிக்குது – 2
நம்ம தெருவெல்லாம் கொண்டாட்டம்
வரம்பு மீறி ஆர்ப்பாட்டம் நம்ம
இயேசுராஜா வந்ததால
ஊரெல்லாம் கொண்டாட்டம் – 3
– குத்தடி
செத்தவனை உயிரோட
எழுப்புவாருங்க – அவனை
பெத்தவனை சன்தோஷப்படுத்துவாருங்க – 2
வார்த்த நீரை ரசமாக மாற்றுவாருங்க – 2
நோக்கி பார்த்தவரின்
கஷ்டங்களை நீக்குவாருங்க – 3
– குத்தடி