நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

வான பராபரனே இப்போ

Vaana Paraaparanae Ippo

Reegan Gomez

வான பராபரனே இப்போ

வாரும் எம் மத்தியிலே

வந்து நின் திருக்கரத்தால்

எம்மை ஆசீர்வதியுமையா

எல்லா மகிமை கனமும்

துதியும் ஏற்றிட வாருமையா

பக்தரின் மறைவிடமே

ஏழை மக்களின் அதிபதியே

பாதமே கூடும் பாதகர் எமக்கு

பரிசுத்தமீயுமையா

வாக்கு மாறா தேவா வாரும்

வல்லமையால் நிறைக்க

– வான

கிருபாசனபதியே நின்

கிருபையில் நிலைத்திடவே

கஷ்டமதிலும் நஷ்டமதிலும்

நின் கருணையில் நின்றிடவே

நின் சக்தியோடு பக்தியிலே

நாம் பூரணராகிடவே

– வான

தாய் என்னை மறந்தாலும்

ஐயா நீர் மறவாதிருக்க

ஆவியினால் எம் உள்ளமதிலே

அக்கினி பற்றிடவே

யேகோவாவே எங்களின் ராஜா

எழுந்து வாருமையா

– வான