நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

வான் புறாவே எங்கள் மீது வந்தமர்ந்திடும்

Vaan Puraavae Engal Meethu Vanthamarnthidum

வான் புறாவே எங்கள் மீது வந்தமர்ந்திடும்

வன் செட்டைகள் விரித்தே

எம் அச்சமெல்லாம் அகல

வன் செயலாய் வந்திறங்கிடும் – எம்மில்

வன் செயலாய் வந்திறங்கிடும்

ஊற்றிடுமே உமதாவியை

மாற்றிடுமே உம்மைப் போலவே

ஆவியின் அக்கினியால் தரிசித்திட

அனலுள்ள இருதயம் அளித்திடவே

அன்பினால் அனைத்தோடும் கனலடைய

அனுதினம் அருள்மாரி சொரிந்திடுமே

– ஊற்றிடுமே

சோர்ந்திடும் உள்ளங்கள் உணர்வடைய

மாய்த்திடும் சரீரங்கள் உயிரடைய

ஆண்டிடும் சக்திகள் அகன்றோடவே

அண்டிவரும் எமக்கு நின் ஜெயம் தாருமே

– ஊற்றிடுமே

பற்பல பாஷைகள் மகிழ்ந்துரைக்க

அற்புத திருவன்பை புகழ்ந்துரைக்க

நற்செய்கையாம் நவ சிருஷ்டியதில்

பொற்பரனே வளர்ந்திட பொழிந்திடுவீர்

– ஊற்றிடுமே

நேசரே நினைத்திடா வேளை வருவீர்

சேர்த்திட தூயவரை உமதுடனே

வேளையும் காலமும் சாயுமுன்னே

வேளையிது தீர கனிந்திறங்கிடுமே

– ஊற்றிடுமே