பாடல்
வாழ்வே நீர்தானய்யா
Vaalvae Neerthaanayyaa
என் வாழ்வே நீர்தானய்யா (2)
என் இயேசுவே என் ஜீவனே
என் ஜீவனின் பெலனும் ஆனவரும்
என் வாழ்க்கையின் ஒளிவிளக்கே
நீர் போதுமே என் வாழ்வினிலே
வாழ்வே நீர்தானைய்யா
– வாழ்வே நீர்தானய்யா
நீர் மாத்ரம் இல்லையென்றால்
மனிதர்கள் உயிரோடு விழுங்கியிருப்பார்கள் (2)
நிற்பதுமே நிலைப்பதுமே (2)
கிருபையினால் தான் வாழ்கின்றேனே (2)
– வாழ்வே நீர்தானய்யா
நான்கு திசையில் அலைந்தேன் திரிந்தேன்
ஆறுதல் சொல்ல யாருமில்லை (2)
உன்னதமானவர் மறைவினில் வந்தேன் (2)
நிம்மதி நிம்மதி அடைகின்றேனே (2) - வாழ்வே நீர்தானய்யா
மாறிப்போகும் உலகினிலே
மாறாத தெய்வம் நீர்தானைய்யா (2)
கிருபையின் மேலே கிருபையை தந்து (2)
நிர்மூலமாகாமல் காத்தீரைய்யா (2) - வாழ்வே நீர்தானய்யா