வாழ்நாளெல்லாம் களி கூர்ந்து மகிழும்படி
Vaalnaalellaam Kali Koornthu Makilumpati
Fr. S. J. Berchmans
வாழ்நாளெல்லாம் (காலைதோறும்)
களி கூர்ந்து மகிழும்படி
திருப்தியாக்கும் உம் கிருபையினால்
புகலிடம் நீரே பூமியிலே
அடைக்கலம் நீரே தலைமுறைதோறும்
நல்லவரே வல்லவரே
நன்றியையா நாள் முழுதும்
– வாழ்நாளெல்லாம்
உலகமும் பூமியும் தோன்றுமுன்னே
என்றென்றும் இருக்கின்ற என் தெய்வமே
நல்லவரே வல்லவரே
நன்றியையா நாள் முழுதும்
– வாழ்நாளெல்லாம்
துன்பத்தைக் கண்ட நாட்களுக்கு
ஈடாக என்னை மகிழச் செய்யும்
நல்லவரே வல்லவரே
நன்றியையா நாள் முழுதும்
– வாழ்நாளெல்லாம்
அற்புத செயல்கள் காணச் செய்யும்
மகிமை மாட்சிமை விளங்கச் செய்யும்
நல்லவரே வல்லவரே
நன்றியையா நாள் முழுதும்
– வாழ்நாளெல்லாம்
செய்யும் செயல்களைச் செம்மைப்படுத்தும்
செயல்கள் அனைத்திலும் வெற்றி தாரும்
நல்லவரே வல்லவரே
நன்றியையா நாள் முழுதும்
– வாழ்நாளெல்லாம்
நாட்களை எண்ணும் அறிவைத் தாரும்
ஞானம் நிறைந்த இதயம் தாரும்
நல்லவரே வல்லவரே
நன்றியையா நாள் முழுதும்
– வாழ்நாளெல்லாம்