நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

வாலிப பிராயத்தில் தேவனை தேடு

Vaalipa Piraayaththil Thaevanai Thaedu

Sirkali Yesuprakasam

வாலிப பிராயத்தில் தேவனை தேடு

வாழ்நாள் நீடித்திடும் நித்திய

ராஜனை நித்தமும் நாடு

கிருபை தொடர்ந்திருக்கும்

சோதனை காலம் வந்திடும் போதும்

துன்பங்கள் உன்னை சூழ்ந்திடும் போதும்

தூயவனே அந்த மூலவனே வந்து

கண்ணீர் துடைத்திடுவார்

கர்த்தரின் வாசம் எத்தனை நேசம்

கவலைகள் பறந்துவிடும்

காலம் இனித்துவிடும்

– வாலிப

தொல்லையில் நல்ல துணைவராம் இயேசு

எல்லையில்லா இன்பம் அளிப்பவர் இயேசு

காலமெல்லாம் அவர் கரங்களில் இருந்தால்

ஞானமெல்லாம் இயேசு நல்கிடுவார்

கர்த்தரின் வாசம் எத்தனை நேசம்

கவலைகள் பறந்துவிடும்

காலம் இனித்துவிடும்

– வாலிப