நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உதவாதவன் என்று தள்ளியதே உலகம்

Uthavaathavan Entu Thalliyathae Ulakam

Lucas Sekar

உதவாதவன் என்று தள்ளியதே உலகம்

தள்ளியதே உலகம் (3)

என்னைத் தள்ளாதவர் என் இயேசு (2)

பொய்யான உலகினிலே

மெய்தெய்வம் தேடி வந்தார் (2)

என் வாழ்க்கை மாற்றிடவே

என் சாபம் ஏற்றாரே (2)

– உதவாதவன்

தாயைப்போல தேற்றினார்

தந்தையைப் போல் சுமந்தாரே (2)

ஆயன் ஆட்டை சுமப்பது போல்

என்னை தினம் சுமந்து சென்றார் (2)

– உதவாதவன்

அப்பா பிதா என்று சொல்ல

மகன் என்ற உரிமை தந்தார் (2)

ஆவியோடு பாடிடுவேன்

நான் கருத்தோடும் பாடிடுவேன் (2)

– உதவாதவன்

இரத்ததில் கிடந்த என்னை பார்த்து

ஒரு கண்ணும் இரக்கம் இல்லை (2)

பிழைத்திரு என்று சொல்லியே

தூக்கி எடுத்தீரய்யா (2)

– உதவாதவன்