நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உறைவிடமாய் தெரிந்து கொண்டு

Uraividamaay Therinthu Konndu

Fr. S. J. Berchmans

உறைவிடமாய் தெரிந்து கொண்டு

உலவுகிறீர் என் உள்ளத்திலே

பிள்ளையாக ஏற்றுக்கொண்டு

பேசுகிறீர் என் இதயத்திலே

அப்பா தகப்பனே உம்மைப் பாடுவேன்

ஆயுள் நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன்

நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தம் ஏது?

ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியம் ஏது?

விட்டு விட்டேன் பிரித்து விட்டேன்

திட்டானதைத் தொடமாட்டேன்

உலக போக்கோடு உறவு எனக்கில்லை

சாத்தான் செயல்களோடு தொடர்பு எனக்கில்லை

விட்டு விட்டேன் பிரித்து விட்டேன்

திட்டானதைத் தொடமாட்டேன்

– அப்பா

தூய்மையாக்கினேன் ஆவி ஆத்மாவை

தெய்வ பயத்துடன் பூரணப்படுத்துவேன்

விட்டு விட்டேன் பிரித்து விட்டேன்

திட்டானதைத் தொடமாட்டேன்

– அப்பா

பயனற்ற இருளின் செயல்களை வெறுக்கிறேன் – அதை

செய்யும் மனிதரை கடிந்து கொள்கிறேன்

விட்டு விட்டேன் பிரித்து விட்டேன்

திட்டானதைத் தொடமாட்டேன்

– அப்பா

அந்நிய நுகத்தோடு பிணைப்பு எனக்கில்லை

அவிசுவாசிகளின் ஐக்கியம் எனக்கில்லை

விட்டு விட்டேன் பிரித்து விட்டேன்

திட்டானதைத் தொடமாட்டேன்

– அப்பா