பாடல்
உந்தன் வல்லமையால் மகிழ்ந்திருக்கின்றேன்
Unthan Vallamaiyaal Makilnthirukkinten
Fr. S. J. Berchmans
உந்தன் வல்லமையால் மகிழ்ந்திருக்கின்றேன்
உந்தன் தயவினால் அசைவுராதிருப்பேன்
நீர் போதுமே என் நேசரே
உம்மால் தானே மேன்மை வந்தது
கேட்டேன் வாய்விட்டு (நீர்) மறுக்கவில்லையே
உள்ளம் விரும்பினதை எனக்குத் தந்தீரே
உள்ளம் விரும்பினதை எனக்குத் தந்தீரே
– நீர் போதுமே
வெற்றி தந்ததால் (நான்) பெரியவனானேன் - நீர்
மேன்மை வந்ததால் என் ஏழ்மை மாறியது
மேன்மை வந்ததால் என் ஏழ்மை மாறியது
– நீர் போதுமே
வாழ ஓடி வந்தேன் சுகம் தேடி வந்தேன்
நீண்ட வாழ்வோடு நித்திய ஜீவன் தந்தீர்
நீண்ட வாழ்வோடு நித்திய ஜீவன் தந்தீர்
– நீர் போதுமே
பூரிப்படைகின்றேன் உந்தன் பேரன்பால்
பெலன் பெறுகின்றேன் உம்மை நம்புவதால்
பெலன் பெறுகின்றேன் உம்மை நம்புவதால் – நான்
– நீர் போதுமே