நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உந்தன் பாதம் பணிகின்றோம் இயேசுவே

Unthan Paatham Pannikintom Yesuvae

Lucas Sekar

பாதம் பணிகின்றோம் இயேசுவே (2)

உந்தன் பாதம் பணிகின்றோம்

உந்தன் பாதம் பணிகின்றோம் (2)

சர்வ பூமியின் ஆண்டவரே (2)

சகலமும் செய்ய வல்லவரே (2)

செய்ய நினைத்தது ஒரு போதும் (2)

என்றென்றும் தடைபடுவதில்லை (2)

– உந்தன் பாதம்

நீதியின் சூரியன் ஆனவரே

செட்டைகளின் கீழ் ஆரோக்கியம்

தீமையை பாரா சுத்தர் நீரே

பாவத்தை பாரா பரிசுத்தரே

– உந்தன் பாதம்

ஒருவரும் சேரா ஒளியினிலே

வாசம் செய்யும் தேவன் நீரே

கர்த்தரே மகா தேவனீரே

எல்லா தேவர்க்கும் இராஜனீரே

– உந்தன் பாதம்

நித்திய மகிமை உடையவரே

நித்தியத்தின் இராஜாவே

நித்திய ஜீவன் அளிப்பவரே

நித்தமும் எங்களை காப்பவரே

– உந்தன் பாதம்