உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும்
Unthan Naamaththil Ellaam Koodum
Fr. S. J. Berchmans
உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும்
எல்லாம் கூடுமே
எந்தன் சமூகத்தில் எல்லாம் கூடும்
எல்லாம் கூடுமே
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமில்லையே – உம்மால்
உந்தன் வார்த்தையால்,
புயல் காற்று ஓய்ந்தது
உந்தன் பார்வையால்,
திருந்தினார் பேதுரு
– கூடாதது
தபித்தாள் மரித்தாள்
ஜெபத்தால் உயிர்த்தாள்
திமிர்வாத ஐனேயா,
சுகமாகி நடந்தான்
– கூடாதது
மீனின் வாயிலே,
காசு வந்ததே
கழுதையின் வாயிலே ,
பேச்சு வந்ததே
– கூடாதது
வாலிபன் ஐத்திரு
தூக்கத்தால் விழுந்தான்
இறந்தும் எழுந்தான்,
பவுல் அன்று ஜெபித்ததால்
– கூடாதது
காலூன்றி நில்லென்று
கத்தினார் பவுல் அன்று
முடவன் நடந்தால்
விஸ்திரா நகரிலே
எலிசாவின் சால்வையால்
யோர்தான் பிரிந்தது
எரிகோவின் உப்புநீர்
ஆரோக்கியமானது
– கூடாதது
கோடாரி மிதந்தது
எலிசாவின் வார்த்தையால்
குஷ்டம் மறைந்தது
யோர்தானில் குளித்ததால்
– கூடாதது