பாடல்
உந்தன் கிருபைதான்
Unthan Kirupaithaan
Chandrasekaran
உந்தன் கிருபைதான்
என்னை வாழ வைத்தது
உந்தன் கிருபை தான்
என்னை பாட வைத்தது – 2
என்னில் ஒன்றும் இல்லை ஐயா
எல்லாம் உந்தன் கிருபையையா
– உந்தன்
ஆயக்காரனை போல் இருந்தேன்
அணைத்துக் கொண்டீரே – 2
பாவியாகிய எந்தனின் மேல்
பாசம் வைத்தீரே
– உந்தன்
உண்மையுள்ளவன் என்று கருதி
ஊழியம் தந்தீரே – 2
ஆசாரியக் கூட்டத்தோடு
சேர்த்துக் கொண்டீரே – 2
– உந்தன்
வாங்குகின்ற மனிதனாக
வாடி நின்றேனே
அள்ளிக் கொடுக்கும் மனிதனாக
ஆசீர்வதித்தீரே
– உந்தன்