பாடல்
உந்தன் காயங்கள் எந்தன் பாவங்களோ
Unthan Kaayangal Enthan Paavangalo
Ebenezer S
உந்தன் காயங்கள்
எந்தன் பாவங்களோ
உந்தன் வேதனைகள்
எந்தன் மீறுதலோ -- 2
எனக்காக உலகில் வந்தவரே
எந்தன் பாவம் போக்க மரித்தவரே --2
உந்தன் அன்பை சொல்ல
வார்த்தை இல்லை
உம்மை போல உலகில்
யாருமில்லை
சேற்றில் கிடந்த எனக்காக
நீர் சாபம் ஆனீரோ
நாற்றம் பிடித்த எனக்காக உம்
அழகை தூறந்தீரோ --2
உந்தன் ரத்தம் சிந்தி என்
பாவம் கழுவினீர்
உம்மை பலியாய் தந்து என்
பாதை மாற்றினீர்(2)
– எனக்காக
உந்தன் நேசம் அறியாமல் நான்
தூரம் சென்றேனே
உந்தன் பாசம் புரியாமல் நான்
விலகி சென்றேனே --2
தேடி வந்தீர் என்னையும்
வாழ வைத்தீட
எந்தன் பார சிலுவையை
நீர் சுமந்திட (2)
– எனக்காக