உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே
Unnathamaanavarae En Uraividam Neerthaanae
Fr. S. J. Berchmans
உன்னதமானவரே என்
உறைவிடம் நீர்தானே - 2
நீர்தானே என் உறைவிடம்
நீர்தானே என் புகலிடம்
ஆதலால் ஆபத்து நேரிடாது எந்த
தீங்கும் மேற்கொள்ளாது
கால் கல்லில் மோதாமலே
காக்கும் தூதன் எனக்கு உண்டு
– நீர்தானே
சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே - 2
சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடக்கச் செய்பவரே
– நீர்தானே
நான் நம்பும் தகப்பன் நீர்
என்று நான் தினம் சொல்லுவேன் - 2
வேடனின் கண்ணி பாழாக்கும் கொள்ளை நோய்
தப்புவித்து காப்பாற்றுவீர் - 2
– நீர்தானே
மன்றாடும் போதெல்லாம்
பதில் தந்து மகிழ்கின்றீர் - 2 -நான்
ஆபத்து நேரம் என்னோடு இருந்து
தப்புவித்து கனப்படுத்துவீர்
– நீர்தானே
நீடிய ஆயுள் தந்து
திருப்தியாக்குகிறீர்
உமது சிறகால் மூடி மூடி
மறைத்து பாதுகாக்கின்றீர்
– நீர்தானே
வாஞ்சையாய் இருப்பதால்
விடுதலை எனக்குண்டு
உம்திரு நாமம் அறிந்ததால்
எனக்கு உயர்வு நிச்சயமே
– நீர்தானே