நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உன்னத தேவனுக்கு மகிமை செலுத்துங்க

Unnatha Thaevanukku Makimai Seluththunga

Lucas Sekar

உன்னத தேவனுக்கு

மகிமை செலுத்துங்க

வானிலும் பூமியிலும்

உயர்ந்த ராஜனுக்கு (2)

உம் நாமம் பாட பாட உள்ளத்தில்

சந்தோஷம் பொங்குதய்யா (2)

உம் நாமம் துதிக்க துதிக்க

தடைகள் எல்லாம் நீங்குதய்யா (2)

– அல்லேலூயா (8)

பூமியின் குடிகளெல்லாம்

பணிந்து துதித்து பாடிடுங்க (2)

அதிசயமானவர் அவர்

வல்லமையுள்ள தேவனவர் (3)

– அல்லேலூயா (8)

ஜீவனையே கொடுத்தீரே

பரிசுத்தமுள்ள தெய்வமய்யா (2)

எங்கள் மனுகுலம் மீட்டவர்

மன்னவரே ஸ்தோத்திரமே (2)

– அல்லேலூயா (8)

சேரக்கூடா ஒளியினிலே

வாசம் செய்யும் தெய்வமவர் (2)

நீதியின் சூரியனவர்

செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் (2)

– அல்லேலூயா (8)