பாடல்
உன்னத தேவன் என்னோடிருக்க
Unnatha Thaevan Ennotirukka
Lucas Sekar
உன்னத தேவன் என்னோடிருக்க
பயப்படவே மாட்டேன் (2)
காருண்ய தேவன் என்னோடு இருக்க
கலங்கிடவே மாட்டேன் (2)
– உன்னத தேவன்
கோலும் தடியும் தேற்றி நடத்துமே (2)
கண்ணீரை துடைத்திடுவார்
தாயைப்போல தேற்றிடும்
உன்னத தேவன் இவரே –
கைவிடவே மாட்டார் (4)
– உன்னத தேவன்
சோதனை சகிக்க பெலன் எனக்களிப்பார் (2)
பெலப்படுத்தும் கிறிஸ்துவினால் (2)
எல்லாம் செய்ய பெலன் எனக்களிப்பார் இயேசு
கைவிடவே மாட்டார் (4)
– உன்னத தேவன்
கர்த்தர் என் சார்பினில் இருக்கும்போது (2)
எனக்கெதிராய் நிற்பவன் யார்?
கர்த்தரே யுத்தம் செய்திடுவாரே – எனக்காய்
பயப்படவே மாட்டேன் (4)
– உன்னத தேவன்