நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உன்னத தேவ குமாரனே உம்மைத் துதிக்கிறோம்

Unnatha Thaeva Kumaaranae Ummaith Thuthikkirom

Lucas Sekar

உன்னத தேவ குமாரனே

உம்மைத் துதிக்கிறோம்

உன்னத தேவ குமாரனே

உம்மைத் தொழுகிறோம்

நீர் இரத்தம் சிந்தி மீட்டீரே

புது ஜீவன் எனக்கு தந்தீரே

மரண வாசல்கள் அடைத்தீரே

புது ஆசீர்வாதங்கள் திறந்தீரே

திறந்த வாசலை வைத்தீரே (2)

என் தேவனே …. என் தேவனே …. (2)

பாவியான என் மீது

கிருபை வைத்து அன்பு கூர்ந்தீர் (2)

நீதிமானாய் மாற்றி என்னை

உமது வீட்டில் சேர்த்தீரே

இழந்த ஆசீர்வாதங்களெல்லாம்

திரும்ப எனக்கு தந்தீரே

உமது அடிமையாய் மாற்றுமே

– என் தேவனே (4)

தாயும் நீர் என் தந்தையும் நீரே

உலகம் தோன்று முன், முன் குறித்தீரே (2)

பெயரை சொல்லி அழைத்தவர் நீரே

எனது கருவை கண்டீரே

உள்ளங்கையில் வனைந்தவர்

நீரே பரம தகப்பன் நீர்தானே

உமது சார்பால் வாழ்கிறேன்

– என் தேவனே (4)