நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உன்னையன்றி வேறே கதி

Unnaiyanti Vaetae Kathi

உன்னையன்றி வேறே கதி

ஒருவரில்லையே சுவாமி

அன்னை தந்தை உற்றார் சுற்றார்

ஆருமுதவுவரோ – அதிசய மனுவேலா

ஆசை என் இயேசு ஸ்வாமி

பண்ணின துரோகமெல்லாம்

எண்ணினா லெத்தனைகோடி

பாதகத்துக் குண்டோ எல்லை

பரிதபித்தேனே தேடி

கண்ணினாலுன் திருவடி

காண நான் தகுமோ தான்

கடையனுக்கருள்புரி

மடியுமுன் யேசு சுவாமி

– உன்னையன்றி

அஞ்சியஞ்சி தூர நின்றென்

சஞ்சலங்களை நான் சொல்லி

அலைகடல் துரும்புபோல்

மலைவு கொண்டேனானையோ

கெஞ்சி கெஞ்சிக் கூவுமிந்த

வஞ்சகன் முகம்பாராய்

கிட்டி என்னிடம் சேர்ந்து

கிருபை வை இயேசு சுவாமி

– உன்னையன்றி

எத்தனை கற்றாலும் தேவ

பக்தியேதுமற்ற பாவி

எவ்வளவு புத்தி கேட்டும்

அவ்வளவுக் கதி தோஷி

பித்தனைப் பொல பிதற்றி

கத்தியே புலம்புமேழை

பேதையை கடைத்தேற்றி

பிழைக்க வை இயேசு சுவாமி

– உன்னையன்றி